Thursday, July 17, 2025

Yesu Rajanin Thiruvadikku | இயேசு ராஜனின் திருவடிக்கு

இயேசு ராஜனின் திருவடிக்கு

சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதரின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்

1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவுமானிரே

2. இளைபாறுதல் தரும் தேவனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே
ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே

3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன்

4. உந்தன் சித்தம் செய்ய அருள் தருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்

5. அல்லேலுயா பாடி வந்து துதிப்பேன்
மனதார உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலுயா அல்லேலுயா ஆமென்

No comments: